Ameerdeen

My photo
வேண்டியதையும், விருப்பப்பட்டதையும் எழுதித் தீர்க்கிறேன்.

Saturday, December 30, 2023

2023-க்கு நன்றி

~
இந்த வருஷம் நிறையா மாற்றம். புதுப்புது அனுபவம். முதல் பாதி ஒரு மாதிரி ஜாலியா போச்சு. ரெண்டாவது பாதி ஏதேதோ ஆகிப் போச்சு. இந்த வருஷம் அளவுக்கு இதுக்கு முன்னாடி வரைக்கும் அழுததில்ல. இன்னமும் சில விசயங்கள்ல இருந்து வெளிய வர முடியல. 

எதிர்ப்பாக்காத நல்ல, கெட்ட சந்தர்ப்பங்கள். நம்பிக்கைலாம் சுக்குநூறா உடைஞ்சி போச்சு. ஆரோக்கியம்ன்னா என்னன்னு கேக்குற அளவு உடம்பும், மனசும் வீக் ஆகிருச்சு. திரும்பவும் பழைய மாதிரி எதார்த்தமாகி வர முடியுமா. ஏத்துக்க முடியுமா. நிறைய கேள்வி ஓடுது.

எப்டியோ நடந்ததெல்லாம் நடந்ததுதான். நண்பன் ஒருத்தன் சொன்னான், "அழலாம், பொலம்பலாம், ஏன் எல்லாத்தையும் தூக்கி போட்டு துறவறம் கூட போக நினைக்கலாம். ஆனா, அர்ஜன்ட்டா சாகுற அளவுக்கு இன்னும் ஆகல. என்ன வேணா பண்ணு. செத்துறாத"ன்னு. ஒரு பெரிய திருப்புமுனைதான் இந்த வருஷம்.

நா கத்துக்கிட்டது ஒன்னே ஒன்னுதான். ஒவ்வொரு நாளும் நமக்கான ஒவ்வொரு விசயங்களையும் நினைச்சி Grateful-ஆ Feel பண்ணனும். ஆனா, அந்த விசயங்கள எப்பவும் Complicate ஆக்கிக்க கூடாது. அது பொருள், வேலை, குடும்பம், நட்புன்னு எதுவா இருந்தாலும் சரி. 

ஒவ்வொன்னா என்னய சுத்தி மாறிட்டே இருக்கு. நானும் கூட. இதுவும் நல்லாதான் இருக்கு. எல்லா கடலுக்கும் கரை இருக்குல. எங்க போய் ஒதுங்குறோம்ன்னு பாப்போம்!

Thank you 2023 for all the lessons, Peoples, laughters and tears! ❤

ஒன்றுமில்லை

~ இருப்பை மெருகேற்றும் படி ஏதேதோ உலறத் தொடங்கி காதல் பாஷைகள் பேசிக் கொண்டிருக்கிறாள். மின்மினிக் கண்களைச் சிமிட்டிக் கொண்டே அருவ...