~
நா உன்ன விரும்புறேன்.
ஏன்?
இதென்ன கேள்வி. பிடிச்சிருக்கு. உங்கூட வாழ நினைக்கிறேன். நீ மட்டும் போதும்ன்னு தோனுது. எனக்கு இந்த எண்ணம் யார்ட்டயும் வரல. அதான் சொல்றேன். நா உங்கூட வாழ ஆசப்படுறேன்.
ம்ம்..
என்ன ம்ம்.. நா என்ன கதையா சொல்றேன். பதில் சொல்லு. ஒவ்வொரு தடவையும் நீ வேணான்னு சொன்னாலும் உங்கிட்டயே வந்து முட்டாள்த்தனமா நிக்கிறேன்ல. சொல்லு..
இல்ல. வேணாம். எனக்கு அந்த மாதிரி யார் மேலயும் தோனல. உம்மேலயும்..
எப்பவுமே தோனாதா?
தெர்ல.. தோனாமலே போய்ட்டா என்ன ஆவேன்னு யோசிக்கிறேன்.
அப்டிலாம் இல்ல. நா வெய்ட் பண்றேன்.
வேணாம். நீ உன் வேலைய பாரு. ஒரு வரியில சொல்ல சொன்னா எனக்கு உம்மேல காதல் இல்ல.
சரி. உன் இஷ்டம். ஆனா, நா ஒன்னு கேக்கவா?
ம்ம்..
எத்தன நாளக்கி இப்டியே இருக்க போற. அவள மறந்து அடுத்தடுத்த கட்டத்த நோக்கி போக வேண்டியதான. நாங்கல்லாம் இருக்கோம்ல..
நா ஒன்னு சொல்லவா?
சொல்லித்தொல..
இப்ப இருக்குற நிலைமைக்கு அவளே திரும்ப எங்கிட்ட வந்தாலும் எனக்கு காதலிக்க தோனாது. அது ஒரு நம்பிக்கை. எல்லாரையும் நம்பக்கூடிய எண்ணத்த நா இழந்துட்டேன். எங்கிட்ட காதல் இல்ல.
உனக்கு எப்போ நம்பிக்கை வரும்.
சிம்பிளா சொல்றேன். உங்க எல்லாருக்காகவும் நா கண்டிப்பா வாழுவேன். நல்லா சம்பாதிச்சி செலவு பண்ணுவேன். எல்லாம் பண்ணுவேன். ஆனா, யாரோவொருத்தி நல்லாருக்குறதுக்காக சாகலாம்ன்னு எனக்கு தோனும்ல. அவள காதலிப்பேன்.
உலகமே ஆச்சரியப்படுற மாதிரி. அது வரைக்கும் இந்த தனிமை எனக்கு புடிச்சிருக்கு.
முட்டாள் மாதிரி பேசாத..
முட்டாள்தான். காதலிச்சிருக்கேன்ல! ❣️

No comments:
Post a Comment