Ameerdeen

My photo
வேண்டியதையும், விருப்பப்பட்டதையும் எழுதித் தீர்க்கிறேன்.

Sunday, February 12, 2023

அணைத்துக்கொள்

 ~

உனக்கு என்னதான் வேண்டும்? 

என்று நீ கேட்டு முடிக்கையில் நான் காட்டும் நெஞ்சனைக்கும் பாவனைக்குப் புன்னகைக்கும் உன் முகம் சொல்கிறது என் பேரன்புக் காதலை.


நேசப்பட்டு மடிந்து கிடப்பது நான் மட்டுமே என்று நினைத்து வீழ்ந்துக் கிடக்கையில் நீயும் அதே மனநிலையில் இருப்பதைத் தெரிந்து கொண்டுப் புத்துணர்வடைவதில் தொடங்குகிறது என் சுயநலம்.


இதுவெல்லாம் காதலா? என்றால், இல்லைய? என்ற பதிலைத் தவிர அதனை விளக்குமளவுக்கு புத்திசாலியாக நானில்லாமல் இருப்பதே இது காதல்தான் என்பதற்கு ஓர் அத்தாட்சியாகத் தெரியவில்லையா.?


நான் என்ன உன்னைத் தலைக்கு மேல் தூக்கி வைத்து ஆடவோ, வெறுங்கையில் நின் பாதங்களை தாங்கவோவா போகிறேன்?

இல்லை, அற்ப மானிடர்களை விட சற்று குறைவாக சொற்ப காதலை உனக்குத் தந்திருப்பேன். அவ்வளவுதான்.


இதுவெல்லாம் வேண்டாம். காதலென்றாலே கசடு படிந்த கறையாய்த் தான் இருக்கும். நீ மட்டும் என்ன அதற்கு விதி விலக்கா? என்று கேட்டாயென்றால். இல்லை.! ஆனால், நீ விதிவிலக்கு தான். நீயெனும் போது உன்னில் நானும் விதிவிலக்குதானே?


உண்மையாய் தான் சொல்கிறாயா.? அவ்வளவெல்லாம் என்னை நேசிக்கும் அளவுக்கும் நான் என்ன செய்து விட்டேன் உனக்கு..?? 

கட்டியணைத்துக் கூறினேன்.

நேசிக்கச் செய்தாயல்லாவா..??

வேறென்ன வேண்டும்..!!


"நெஞ்சாங்கூட்டில் சாயும் போதும் நேர்மையுண்டு"


#Hug_Day ❣️




No comments:

Post a Comment

ஒன்றுமில்லை

~ இருப்பை மெருகேற்றும் படி ஏதேதோ உலறத் தொடங்கி காதல் பாஷைகள் பேசிக் கொண்டிருக்கிறாள். மின்மினிக் கண்களைச் சிமிட்டிக் கொண்டே அருவ...