உன்னயக் காதலிச்சேன்!
ரொம்ப அநாகரிகமான முறையிலக் காதலிச்சேன். நியாய தர்மம்லாம் எப்பவுமே நா பாத்ததில்ல. பாக்கவும் மாட்டேன். அதுக்கு தனியா ஆயிரம் தடவ மன்னிச்சுக்க இவ்ளோ தூரமா நீ விலகியிருக்கக் கூடாது. ஒரு ரெண்டாயிரத்து முன்னூறு அடி தூரத்துல நீ இருந்துருக்கனும். இதே வெறுப்போட, கோபத்தோட இருக்கனும். என்னய வெறுத்து, வெறுத்தே அடிக்கடி நெனச்சிட்டு இருக்கனும். பொழுதுபோக்கா என்னயத் திட்டித் திட்டி யோசிச்சிட்டே இருக்கனும். இந்த ஆசையெல்லாம் ஒரு பக்கமா இருக்கட்டும்.
ஒன்னுத் தெரிஞ்சிக்கோ. இந்த மனசு இருக்கே. இல்ல பொதுவா வேணாம்.
என்னோட மனசு இருக்கே அது ஒரு பைத்தியம். ஆமா, முத்துற நிலைமைல இருக்குற முக்கால்வாசிப் பைத்தியம். எனக்கு உன் அளவுக்கு தைரியமோ, நேர்மையோ, காதலோ எந்தக் கருமமுமே இருந்ததும் கிடையாது. இருக்காது.
கேடுகெட்ட ஜென்மம்ல!
இப்டியே இருந்துர்லாம்ன்னு முடிவுல இருக்கேன். இதுவும் நல்லா ஜாலியாதான் இருக்கு. நீ என்னயக் கேள்வியே கேட்க மாட்ட. புத்திமதி சொல்லிட்டு நா சொன்னா மட்டும் கேக்கவாப் போறன்னு சொல்லிக் கேக்குறவனையும் கேக்கக் கூடாதுன்னு கடுப்பாக்கி விடுற மனுஷங்கதான நாமெல்லாம். அதான் அட்வைஸ் மட்டுமேபண்ணிட்டு இருக்கோம்.
சொல்ல வந்தத சொல்றேன். தப்புன்னுத் தெரியாம யாருமே தப்புப் பண்றதில்ல. எனக்கும் தெரியும், நெறயா தப்பு என்மேலதான் இருக்கு. திருத்திக்கிறேன். சாரி.
சரி சரி மன்னிக்க வேணாம். திடீர்னு உன் ஞாபகமா இருந்துச்சு. அப்டியே அசந்துத் தூங்கிட்டேன். ரெண்டே கால் மணி இருக்கும். என் கைய நீ வந்துப் புடிக்கிற மாதிரி, இழுக்குற மாதிரி ஒரு நெனப்பு. சுதாரிச்சி முழிச்சிப் பார்த்தா கையில இருந்த வென்ப்ளான் கட்டில்ல மாட்டி இழுத்துருக்கு.
அப்டியே புடுங்கீருந்தா நேத்து நைட்டே ரத்தமெல்லாம் போய் ஒனக்குன்னு இருந்த ஒரே ஒரு கவிஞனும் மர்கயாதான். அப்ப தோனுச்சு. கண் முன்னாடி நீ நின்னு சிரிக்கிற மாதிரி. கொஞ்சமா அழுகையே வந்துரும் போல இருந்துச்சு. இத்தன நாளா இவ்ளோ தூரத்துல நாம இல்ல. ஆனா, இப்ப இருக்கோம். சூழ்நிலைய ஏத்துக்கனும், அதே நேரம் எல்லாத்தையும் சகிச்சிக்கிட்டேயும் இருக்க நினைக்கிறது முட்டாள்த்தனம்.
ரொம்ப லென்த்தா பொலம்புறனோ.
ஒரு சின்ன காரணத்துக்குத் தான் இவ்ளோ தடுமாற்றமும். எப்ப யாருக்கு, என்ன நடக்கும், ஏது நடக்கும்ன்னு நம்மால சொல்ல முடியாதுல. அதுனால இந்த சகென்ட் யோசிச்சத, மனசுல பட்டத பட்டுன்னு சொல்லீருரேன். உன்ட்ட பேசனும், மடியில தூங்கனும்ன்னு கவிதையா சொல்லப் புடிக்கல. என் கைக்கு எட்டுற தூரத்துல நீ இருந்திருந்தா இந்த வலியோ, கஷ்டமோ எனக்குப் பெருசாவே இருந்திருக்காது. உன் சிரிப்புல எல்லாமே காணாமப் போயிருந்துருக்கும். நல்லாருந்துருப்பேன்.
சிம்பிளா சொல்லப்போனா. மிஸ் பண்றேன். மிஸ் யூ!


No comments:
Post a Comment