~
எனக்கு ரொம்ப அழகான வருஷம் இது. ஆரம்ப மூணு மாசம் கஷ்டமா இருந்துச்சு. வேலையெல்லாம் விட்டுட்டு ஊர் ஊரா திரிஞ்சேன். சென்னையே வேணாம்ன்னு தான் போன வருஷம் வந்தேன். அதே சென்னைக்கு திரும்ப போற நிலைமை வந்துச்சு. சென்னை நிறைய விசயங்கள தந்துச்சு. என்னய நானே சந்தோஷமாக்கிக்க உதவுச்சு.
இஞ்சினியரிங் அட்மிஷன் போட்டேன். முதல் தடவை லீவ்லாம் எடுக்காம வேலை பாத்தேன். நிம்மதியா இருந்தேன். நிறைய விசயங்கள செஞ்சேன். எனக்கு ரொம்ப புடிச்ச எத்தனையோ ஆசைகள நிறைவேத்திக்கிட்டேன். இப்போ இன்னக்கி சந்தோஷமா இருக்கேன்.
நா இப்டிதான்னு நினைச்ச நிறைய விசயம், அப்டி இல்லன்னு தெரிஞ்சிக்கிட்டேன். சின்ன சின்ன ஏமாற்றமும், வருத்தமும் இருந்தாலும் நிறையா தெரிஞ்சிக்க முடிஞ்சது. ரொம்ப எளிமையா, ரொம்ப நேர்மறையா, ரொம்ப நேர்த்தியா என்னய நானே மாத்திக்க முடிஞ்சது.
அதிகப்படியான புது மனுஷங்கள சந்திச்சேன். நிறையா விசயங்கள கத்துக்கிட்டேன். கத்துக்கிட்டே இருக்கேன். வேலை, படிப்புல ஆரம்பிச்சி நிறையா விசயங்கள் நடந்துச்சு. என் கூட இருந்த, இப்போ வரைக்கும் கூட இருக்குற எல்லாருக்கும் என் அத்தனை அன்புகளும். நிறைய பேருக்கு நன்றிக்கடன் பட்ருக்கேன். நல்லாருப்போம்!
இன்னொரு முறை இந்த வாழ்நாளின் சொற்பமான அழகிய நாட்களையும் தனதாக்கிச் சென்ற இந்த வருடத்திற்கு என் அத்தனை அன்பூக்களும் ❤


No comments:
Post a Comment