~
என்ன வேண்டும் என்று என்னிடம் கேட்காதே.
நான் கடல் கடந்து பறந்து கொண்டிருக்கும் போது நிலம் கேட்பேன்.
ஓய்வெடுக்கும் நிலத்தில் இருந்து கடல் காதலிப்பேன்.
பாலையில் மீனும், ஓடையில் ஒட்டக மாமிசமும் என் நாவிற்கு தேவைப்படும்.
நீ துயரப்படப் போகும் என் நேசத்தை ஒரு போதும் நம்பாதே.
என் பிரியங்கள் சட்டென வந்து விட்டுப் போகும் தும்மலாய் மாறிக் கொண்டேயிருக்கும்.
உன்னால் என்னை காதலிக்கவும் முடியாது, வெறுக்கவும் முடியாது.
நான் தெளிவான பைத்தியம். அப்படித்தான் எனக்கு இருக்கவும் தெரியும்! ❤

No comments:
Post a Comment