~
காதல்
செருப்பாலடித்த தடம்.
புறந்தள்ளி கொண்டாடப்பட்ட விழாக்கள்.
அவமதிக்கப்பட்ட இடம்.
ஊட்டப்படாத எனக்குரிமையான உணவு.
உடனிருக்க முடியாத உறவு.
என்னோடிருந்தும், இல்லாமலும் வாழ்வை சிதைத்த உயிர்கள்.
குற்றத்தைத் தூண்டிய மனிதர்கள்.
வாங்கிய அர்த்தமற்ற குற்றச்சாட்டுகள்.
புகட்டப்பட்ட பழி.
அருவருப்பான கெட்ட வார்த்தைகள்.
தூக்கியெறியப்பட்ட தூரம்.
துரத்தி விடப்பட்ட வீடு.
வெறுத்து என்னோடிருந்த தகப்பன்.
அறிமுகமற்று இல்லாமல் போன தாய்.
காட்டப்படாத அத்தியாவசிய தாயன்பு.
ஒட்டுமொத்தமான சபிக்கப்பட்ட முந்தைய வாழ்வு.
அத்தனைக்கும் பரிகாரமாய் இளமையில் என்னிடம் உலகம் கேட்ட முதல் மன்னிப்பு.
ஏற்றுக் கொண்டதற்கு பரிசாக ஒரு குரல்.
"நா உன்ன விரும்புறேன் ❤"

No comments:
Post a Comment