Ameerdeen

My photo
வேண்டியதையும், விருப்பப்பட்டதையும் எழுதித் தீர்க்கிறேன்.

Tuesday, February 20, 2024

சாகாமலிருக்க


~
யார் போலும் இருப்பது என்பது நடக்காத ஒன்று. பிடித்த யாரோ ஒருவர் அல்லது சிலரை போல் இருக்க முயல்வது தான் இவ்வாழ்வு. பன்முகம் கொண்ட மனிதர்களுக்கு மத்தியில் நம் குணம், நாம் சார்ந்திருக்கக் கூடிய மனிதர்களின் குணநலன்களை ஒட்டியே அமையும். 

எப்பேர்ப்பட்ட மாமனிதனாக சமூகத்தில் முகம் காட்டிக் கொண்டிருப்பவரையும் நாம் நிராகரிக்கும் நிலை வரலாம். அனைவருக்கும் தவறானவராக தெரிபவன் மேல் கரிசனம் வரலாம். ஒவ்வொருவருக்கும் ஒரு தன்னியல்பு இருந்தே தீருமல்லவா? அதுதான் நாமென்ற அடையாளம்.

அனுபவப்படுதல், கற்றல், ஏற்றுக்கொள்தல், திருந்துதல் என்று இவையெல்லாவற்றையும் கடந்த ஒன்று இருக்கிறது. அது தனிமனித அறம். நான் எந்த கொள்கையையும், எந்த கோட்பாட்டையும் முழுதாக கற்றுக் கொள்ளாதவன் என்று ஒதுங்கி ஒருவன் இருப்பான். அவனுள் கூட அந்த அறம் இருக்கும். மனிதநேயத்திற்கு எதிராக எதுவும் செய்ய விரும்பாத ஒரு ஜீவனாய் வாழ்ந்து கொண்டிருப்பான். 

அவன் அந்த குணம்தான் உள்ளார்ந்த தன்னியல்பிலேயே இருப்பது. நம் தனிப்பட்ட அறத்திலிருந்து நகர எவ்வளவு பெரிய உந்துதல் நிகழ்த்தப்பட்டாலும், அந்த தன்னியல்பை பேணினாலே போதும். நாம் சாகாமலிருக்கலாம்!

❣️

No comments:

Post a Comment

ஒன்றுமில்லை

~ இருப்பை மெருகேற்றும் படி ஏதேதோ உலறத் தொடங்கி காதல் பாஷைகள் பேசிக் கொண்டிருக்கிறாள். மின்மினிக் கண்களைச் சிமிட்டிக் கொண்டே அருவ...