Ameerdeen

My photo
வேண்டியதையும், விருப்பப்பட்டதையும் எழுதித் தீர்க்கிறேன்.

Sunday, August 31, 2025

நினைவாய்!


~
நான் நினைக்காமல் இருக்க நினைக்கும் நினைவுகள் உன்னுடையது. அதில் மிகச்சிறிய பாகங்களை அவ்வப்போது உதறி விட்டிருப்பேன். நீ சுமந்து கொண்டிப்பதாக, அதன் எடை உன் தோள்களை பாரமாக்குவதாக நினைத்துக் கொண்டிருக்கும் ஒவ்வொன்றும் என் நினைவுகளின் துகள்களே. அவ்வப்போதைய உன் கண்ணீருக்கு காரணம் அதன் தூசு.

உனக்கென்ற காதலின் பாரத்தை நான் மிகையாக்காமல் விட்டிருக்கலாம். அது என் பழக்கம். எனக்கு மெனக்கெடச் செய்ய பிடிக்காது. நான் தந்து விட்டதென்னவோ கூடடைத்த கிளிக்கு கொடுக்கும் கொய்யாத் துண்டு போலத்தான். உனக்கது பெரியது. ஆனால், என் தோப்பெல்லாம் உன் பெயர்தான் ஒலிக்குமென்று நான் சொன்னால் உனக்கெப்படி தெரியும்.

உனக்கென்ன.. மீதமிருக்கும் நன்னாட்களில் ஒரு வாழ்த்துச் செய்தியாக நீ இருக்க விழைகிறாய். நான் உன் வாழ்வின் வாழ்த்தாக சொல்வதே இப்பிரிவைத் தான். இதற்குப் பின் நீ என் சார்ந்த எதையும் சுமக்க வேண்டிய அவசியமே இருக்காது. என்ன ஒரேயொரு வருத்தம் "உனக்கு இன்னும் கொஞ்சம் நான் காதலைக் காட்டியிருக்கலாம்"

வாழ் நீ! ❣️

No comments:

Post a Comment

ஒன்றுமில்லை

~ இருப்பை மெருகேற்றும் படி ஏதேதோ உலறத் தொடங்கி காதல் பாஷைகள் பேசிக் கொண்டிருக்கிறாள். மின்மினிக் கண்களைச் சிமிட்டிக் கொண்டே அருவ...