~
மூணு மணி நேரம், நாளு மணி நேரம் அப்டி என்னடா பேசுவீங்கன்னு கேப்பாங்க. சினிமா. ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு விசயம் புடிக்கும். எனக்கு தனிப்பட்ட வகையில் சினிமான்னா ரொம்ப விருப்பம். எனக்கு ரொம்ப நெருக்கமான நிறைய பேர் சினிமா விரும்பிகள்தான்.
ஹீரோக்காக மட்டுமே படத்துக்கு போயிட்டிருந்த காலம் மாறிப் போய் டீசர்ல வந்த வித்தியாசமான ஒரேயொரு சீன், ஒரேயொரு துணை நடிகர்ன்னு நிறைய சின்ன காரணத்துக்காகலாம் படத்த பாத்துருக்கேன்.
ஒவ்வொரு படமும் ஒவ்வொரு அனுபவம். ஒரு புத்தகத்த படிச்சி முடிச்ச மாதிரி. அதுல இருந்து மீண்டு வர்ரதுக்கான கால இடைவெளிதான் அது நமக்குள்ள ஏற்படுத்தி இருக்குற தாக்கத்தோட அளவு.
ஒருசில படங்கள சந்தோஷமா இருக்கனும்ன்னு நினைக்கும் போது பாப்போம். ஒருசில படங்கள ஃபீல் பண்ணனும்ன்னே பாப்போம். அந்தந்த படம் அந்தந்த உள்ளுணர்வ தூண்டும் போது
"Movies makes my smile and cry".
ஒரு அப்பா தன் பிள்ளைட்ட சொல்லி புரிய வக்கிறத, ஒரு ஆசிரியர் ஒரு மாணவன்கிட்ட சொல்லி புரிய வக்கிறத, ஒரு முனிவர் தன் சீடர்கள்ட்ட சொல்லி புரிய வக்கிறத ஒரு சினிமா புரிய வைக்கும். கற்றுத் தரும். சினிமா ஒரு பாடம். அது ஒரு வாழ்க்கை.
#Movies_are_part_of_my_Life...♥


No comments:
Post a Comment