~
மதுபானக்கடை வாசலில் நின்று கொண்டு தந்தை என்னும் குடிகாரன் காரி உமிழ்ந்து மகன் மீது துப்பும் போது யாரேனும் கேட்டிருக்கலாம்.
ஒண்டிப் பிழைத்த மளிகைக் கடையின் வேலை நிமித்தமாகத் தான் விடுப்பு எடுத்தேன் எனும் போது வீடில்லையா என்று தொடங்கி என் வகுப்பில் யாரேனும் கேட்டிருக்கலாம்.
என் தரப்பு அநீதிகள் வெறுமனே பணம் மட்டுமே கொண்ட மாமனிதர்களின் தரப்பில் நியாயப்படுத்த படும் போது சக சபையினரில் யாரேனும் கேட்டிருக்கலாம்.
உனக்கு அழுகிய பழமும், உடைந்த முருக்குமே தீணி என்று அக்காள் ஒதுக்கிக் கொடுத்த போது அவர் பிள்ளைகளே அவரிடம் கேட்டிருக்கலாம்.
உன் சித்தியைத் தாண்டி நான் உன்னை இந்த வீட்டில் வைத்திருக்க முடியாது என்று வெளியேறச் சொல்லும் போது நானே கூட கேட்டிருக்கலாம்.
ஏன் என்று!

No comments:
Post a Comment