~
பெண் என்பவள் என்று நிறைய விளக்கவுரைகள் சொல்லியும் முடியாத நீட்சியாக எப்போதும் பெண்ணைச் சுற்றிய, பெண்ணை பற்றிய கதைகள் நீண்டு கொண்டேதான் இருக்கிறது. அடுத்தடுத்த தனக்கு நெருக்கமான மனிதர்களை இன்ன இதுதானென்று சொல்லி முடிக்கவியலாத அசாத்திய பிடிப்புகளை தந்து வளர்த்தெடுத்துக் கொண்டே இருக்கிறார்கள் பெண்கள்.
ஆணென்பது பிறப்பு, பெண்ணென்பது பவுசு என்று சொல்லுமளவுக்கு ஊர் மெச்ச எத்தனையோ பெண்களை பிள்ளையிலிருந்து, பாட்டி வரை பெருமையாய் பார்த்து வளர்ந்திருக்கிறோம். பெண் இல்லாத நிலை ஆகிப் போனால் ஆணென்பவன் அர்த்தமற்றுப் போவானென்று எப்போதும் தோன்றும். பெண்ணென்பவள் ஆறுதல், பெண்ணென்பவள் விதி. பெண்ணென்பள் பிரியம். பெண்ணென்றாலே திருவிழா.
கவிஞர் வெய்யில் ஒரு மேடையில் சொல்லியிருப்பார்.
"பெண் நிறைவாய் இருப்பவள். அவளுக்கு ஆண் இன்றி எல்லாமும் கிடைத்து விடுகிறது. ஆணிடம்தான் மிகப்பெரிய பிச்சைப் பாத்திரம் இருக்கிறது"
என் பிச்சைப் பாத்திரத்தை நிரப்பிய, அதனைப் பிடுங்கி தரையில் அமர்த்திய, அடித்து திருத்திய, ஆளாக்கி வழிநடத்திய, தலைமேல் தூக்கி வைத்துக் கொண்டாடிய அத்தனை தேவதைகளுக்கும் என் நன்றிக்கடன்களை உரித்தாக்குவேன். வாழ்வெனும் வானில் வண்ண விண்மீன்களாய் பிரகாசிக்கும் பிரியத்திற்குரிய அனைவருக்கும் பெண்கள் தின வாழ்த்துக்கள்.
#HappyWomensDay ❤

பெண்களின் வலிமையை உயர்த்தும் ஆண்களின் எண்ணங்கள் தான் சமத்துவத்துக்கு அடித்தளம். அந்த எண்ணத்தோடு வாழ்த்து கூறியதற்கு நன்றி!! இப்படிபட்ட ஆண் ஆதரவு பெண்களுக்கு மிக பெரிய பலம். எனக்கும் ஒருவகையில் பலமாக இருக்கும் உங்களுக்கு எனது ஆத்மார்த்தமான நன்றிகளை தெரிவிப்பதில் மெத்த மகிழ்ச்சி அடைகிறேன், அமீர்தீன்!!
ReplyDelete