அமீர்தீன்
மகிழ்ச்சியாய் இருக்கவே வரம் வாங்கி வாழ்பவன் ❤
Ameerdeen
Tuesday, March 10, 2026
ஒன்றுமில்லை
Saturday, March 7, 2026
பெண்கள் தினம்
~
பெண் என்பவள் என்று நிறைய விளக்கவுரைகள் சொல்லியும் முடியாத நீட்சியாக எப்போதும் பெண்ணைச் சுற்றிய, பெண்ணை பற்றிய கதைகள் நீண்டு கொண்டேதான் இருக்கிறது. அடுத்தடுத்த தனக்கு நெருக்கமான மனிதர்களை இன்ன இதுதானென்று சொல்லி முடிக்கவியலாத அசாத்திய பிடிப்புகளை தந்து வளர்த்தெடுத்துக் கொண்டே இருக்கிறார்கள் பெண்கள்.
ஆணென்பது பிறப்பு, பெண்ணென்பது பவுசு என்று சொல்லுமளவுக்கு ஊர் மெச்ச எத்தனையோ பெண்களை பிள்ளையிலிருந்து, பாட்டி வரை பெருமையாய் பார்த்து வளர்ந்திருக்கிறோம். பெண் இல்லாத நிலை ஆகிப் போனால் ஆணென்பவன் அர்த்தமற்றுப் போவானென்று எப்போதும் தோன்றும். பெண்ணென்பவள் ஆறுதல், பெண்ணென்பவள் விதி. பெண்ணென்பள் பிரியம். பெண்ணென்றாலே திருவிழா.
கவிஞர் வெய்யில் ஒரு மேடையில் சொல்லியிருப்பார்.
"பெண் நிறைவாய் இருப்பவள். அவளுக்கு ஆண் இன்றி எல்லாமும் கிடைத்து விடுகிறது. ஆணிடம்தான் மிகப்பெரிய பிச்சைப் பாத்திரம் இருக்கிறது"
என் பிச்சைப் பாத்திரத்தை நிரப்பிய, அதனைப் பிடுங்கி தரையில் அமர்த்திய, அடித்து திருத்திய, ஆளாக்கி வழிநடத்திய, தலைமேல் தூக்கி வைத்துக் கொண்டாடிய அத்தனை தேவதைகளுக்கும் என் நன்றிக்கடன்களை உரித்தாக்குவேன். வாழ்வெனும் வானில் வண்ண விண்மீன்களாய் பிரகாசிக்கும் பிரியத்திற்குரிய அனைவருக்கும் பெண்கள் தின வாழ்த்துக்கள்.
#HappyWomensDay ❤
Wednesday, March 4, 2026
நாமொரு இம்மி
Thursday, February 26, 2026
மீட்சி
~
சில நாட்கள சாதாரணமா கடந்துற முடியிறதில்ல. எவ்வளவு இறுக்கி பிடிச்சாலும் சில விசயங்கள மறைச்சிட்டே இருக்க முடியிறதில்ல. சில நினைவுகள மறந்துட்டு நிம்மதியா வாழ்ந்துறதுக்கு மனசும் அனுமதிக்கிறதில்ல. நாட்கள நியாபகம் வச்சிருக்குறதோட மிகப்பெரிய பலகீனம் இது.
சிலநேரம் மறக்குறதுதான் எல்லாருக்கும் நல்லதுன்னு சொல்லுவாங்க. அது அப்டியில்ல. மன்னிக்கனும். எந்த விதத்திலும் தன் எண்ணத்தால கூட விரும்பி நேசிச்ச ஒருத்தருக்கு காயத்த குடுக்க கூடாதுன்னு மன்னிச்சிறனும். ஆனா, கடக்க முயற்சி பண்ணி, பண்ணி தோத்துக்கிட்டே இருக்குற ஒருத்தனுக்கு மறக்குறது சாதாரண விசயமில்லல.
இந்த நாள், இத்தன மணி, மதியம், காலைன்னு ஒவ்வொரு நிமிஷமும் அத்தனை அத்தனை எதிர்மறையான நினைவுகளையும் அசைபோட்டு இருந்தாலுல், எந்தவொரு வெளிப்படையான தாக்கத்தையும் நிகழ்த்தாம அமைதியா கடந்து போக ஆயிரம் காரணங்கள் இருக்கும். உடைய ஒரேயொரு தேயாத நினைவு போதும்.
நீங்கள் நேசிக்கக் கூட வேண்டாம். வாழ்வென்பது மிகப்பெரிய சாபமென்று நினைக்கக் கூடிய விளிம்பிற்கு எந்த உயிரையும் நகர்த்தாதிருங்கள்!
Tuesday, February 17, 2026
தேநீர் மிடறு
~
ஒரு தேநீர் மிடரு போல ஒவ்வொரு மனிதர்களிடமும் பேச விழைகிறேன். சுவாரசியமற்ற மனிதர்களென்று யாருமேயில்லை. ஒவ்வொருவரின் கதையிலும் தனக்கென்றொரு ஒரு கதாநாயகப் பாத்திரம் வைத்துக் கொள்வார்கள்.
நீங்களும் நானும் அப்படித்தான். இங்கு யாருக்கும் உடனிருப்பவனாக இருக்கப் பொருந்தவில்லை. என்னோடு யார் வேண்டுமானாலும் இருந்து கொள்ளட்டும் என்றுதான் சொல்ல நினைக்கிறோம்.
நிறைய கதைகள் தனக்கு நடந்தவைகளைச் சுற்றியே பேசும் போது, சுற்றி நடப்பைகளுக்கு இடையில் நாம் என்ன செய்கிறோம் என்று சில முறை யோசிக்க முயற்சி செய்திருக்கிறேன். உண்மையில் இங்கு யாரும் மையத்திலும் இல்லை, யாரும் வெளியிலும் இல்லை.
நீங்களும் நானுமாய் ஒரு குவளைத் தேநீர் போல் கலந்து ஒன்றாய்தான் இருக்கிறோம். முதல் மிடருக்கும், இரண்டாம் மிடருக்குமான இடைவெளியில்தான் இத்தனை நேசமும், வாழ்தலும்.
பூஜ்ஜியக்காரன்
என்னைப் போன்ற சுழியமான மனநிலை கொண்ட மனிதனை நான் பார்த்ததில்லை.
தப்பென்று தெரிந்த அடுத்த கணம் மன்னிப்பு கேட்க தயாராகி விடுவேன்.
கோபத்தில் ஏதேனும் பேசி விட்டால் தூங்குவதற்கு முன் போன் செய்து மன்னிப்பு கேட்பேன்.
பிடித்திருந்தால் யோசிக்காமல் பாராட்டி விடுவேன்.
தூங்குவதற்கு முன் மனதளவில் எல்லோரையும் மன்னித்து விடுவேன்.
ஒரு முழு இரவை ஒருவரின் மீது கோபத்தோடு கடத்தத் தெரியாது.
யாருடைய மனஸ்தாபத்தோடும் அடுத்த நாளை தொடங்க பிடிக்காது.
மகிழ்ச்சியாக வாழ அல்லது சாக மன்னிக்கவும், மன்னிப்பு கேட்கவும் தயாராக இருக்க வேண்டும்.
கண்டிப்பாக இன்று இரவு இறந்து விடுவோமென்று, மனதின் ஒரு ஒரத்தில் நினைத்துக் கொண்டு உறங்கச் சென்றே பழகிவிட்டது.
அப்படி சாகாமல் விழித்தேன் என்றால் ஒரேயொரு பெரிய ஆசையோடு அடுத்த நாளை தொடங்குவேன்.
கண்டிப்பாக நான் என்னைப் போன்ற சுழியமான மனநிலை கொண்ட மனிதனை சந்திக்கவே கூடாது.
காதலர் தினம் - 2026
அந்நியராய்
Tuesday, February 3, 2026
மென்மை | மேன்மை
Wednesday, January 14, 2026
நீயென் நிலம்!
சுவை
கண்ணுக்கெட்டா
Tuesday, January 13, 2026
போர்வையின் நினைவு!
நலமாயிருக்கிறாய்தானே?
Wednesday, October 29, 2025
நிறைவாய் மனிதா!
ஒன்றுமில்லை
~ இருப்பை மெருகேற்றும் படி ஏதேதோ உலறத் தொடங்கி காதல் பாஷைகள் பேசிக் கொண்டிருக்கிறாள். மின்மினிக் கண்களைச் சிமிட்டிக் கொண்டே அருவ...
-
~ என்னை சிரிக்க வைத்து உன் சிரிப்பு அழகாயிருக்கிறது என்கிறாள். துரதிஷ்டசாலி என்று தூக்கியெறியப் பட்டவனுக்கு வாழ்நாள் மோட்சமாய் வேறென்ன தே...
-
~ யாரும் நிர்கதியான நிலையில் இல்லை. யாரும் சோகங்களையும், பாரங்களையும் சுமந்து கொண்டே வாழ்ந்து தீர வேண்டிய கட்டாயமில்லை. மயக்கத்திலாவது நீண்ட...
-
~ கண்டிப்பாக ஒருநாள் இதை வாங்கி விடலாமென்றே எல்லா ஏங்கங்களும் ஷாப்பிங் மாலில் கண்ணாடி துடைத்துக் கொண்டிருக்கிறது..! //// இருந்த இருபதும் ச...
